பான் கார்டுக்கு இனி ஆதார் எண் அவசியமில்லை!

May 13, 2017, Chennai

Ads after article title

டெல்லி, மே 13 (டி.என்.எஸ்) வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டையான ‘பான் கார்டு’ பெற வேண்டுமானால், ஆதார் எண் தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.


தற்போது இதில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

80 வயதானவர்கள் இனி பார்ன் கார்டு கோரி விண்ணப்பித்தால் அவர்கள் ஆதார் எண் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல், அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை கேட்டு விண்ணப்பிக்கிறபோது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதில் இருந்து விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.